நடிகர் ரஜினிக்கு சிறுநீரக கோளாறு – மருத்துவமனையில் அனுமதி

17

சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுக்கு முன் ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.

சில மாத ஓய்வுக்கு பிறகு கோச்சடையான், லிங்கா படங்களில் நடித்தார். தற்போது கபாலி, 2.0 படங்களில் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்புக்காக கடந்த வாரம் மலேசியா சென்ற ரஜினி ஓரிரு நாளிலேயே சென்னை திரும்பினார்.

சிறுநீரக சிசிச்சைக்காக தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள டாக்டர்கள் அறிவுரை வழங்கி இருந்தனர். இதையடுத்து நேற்று காலை அவர் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் வழக்கமான பரிசோதனைகள் செய்தனர்.

பின்னர் மாலையில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார் ரஜினி. 2.0 படப்பிடிப்பில் ரஜினி இன்று பங்கேற்பதாக இருந்தது. அதற்கான அரங்கம் இன்னும் தயாராகாததால் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. ‘இரண்டு, மூன்று தினங்களில் அரங்கம் தயாரானவுடன் படப்பிடிப்பில் பங்கேற்பார். சிறுநீரக கோளாறு காரணமாகவே அவர் சிகிச்சை பெற்று திரும்பினார்’ என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.