ஸ்கூல் பீஸ் கட்டமுடியாததால் பிள்ளைகளை விரக்தியில் கொன்ற தந்தை

Father

பெங்களூர் மாகடிரோடு கே.பி.அக்ரகாரா பகுதியில் வசிப்பவர் சிவகுமார். இவர் சிக்பேட்டையில் பைகள் விற்பனை செய்யும் கடையில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு 9 வயதில் பவன் என்ற மகனும், 6 வயதில் சின்சனா என்ற மகளும் இருந்தனர். இருவரும் மாகடி ரோட்டில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். குடும்பத்தை நடத்த அவரது சம்பள பணம் போதுமானதாக இல்லை. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு தாயும் வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் 2 பிள்ளைகளுக்கும் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. அதற்கு பணம் திரட்ட அவரால் முடியவில்லை. ஏற்கனவே கடன் தொல்லைகளும் இருந்தது. கடன் காரர்ளும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனம் உடைந்த சிவகுமார், திடீர் என்று ஆவேசம் அடைந்து 2 பிள்ளைகளையும் அடித்துச் கொன்றார்.

Father Kills

பின்னர் பிணங்களை சாக்கு மூட்டையில் கட்டி அருகில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் வீசினார். அதன்பிறகு தலைமறைவாகி விட்டார். இதற்கிடையே வீடு திரும்பிய தாய் 2 பிள்ளைகளும் கணவரும் இல்லாததால் செல்போனில் கணவருடன் தொடர்பு கொண்டார். அவர் குழந்தைகளை தர்ம சாணிக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்தார். மறுநாள் கணவர் மட்டும் வீடு திரும்பினார். அப்போது குழந்தைகள் எங்கே என்று மனைவி கேட்டார். அதற்கு தர்ம சாலையில் விட்டு விட்டு வந்தேன். அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றார்.

இதனால் சந்தேகம் அடைந்த மனைவி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து சிவகுமாரை பிடித்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் கல்விக்கட்டணம் செலுத்த முடியாததால் குழந்தைகளை கொன்றதாக உண்மையை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அருகில் உள்ள கால்வாயில் சாக்குமூட்டையில் வீசப்பட்டு கிடந்த பிணங்களை கைப்பற்றினார்கள். சிவகுமார் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.