எலும்பை பலமாக்கும் பசலைக்கீரை

DCFC0011

கூரைகளின் மேல் பச்சை பசேலென்று படர்ந்து வளரக்கூடிய கொடி வகை, சிவப்பு நிறத்தில் கொடியையும், காய்களைகளையும் கொண்டச் செடி, நல்ல மொத்தமான இலைகளை உடைய தாவரம்.

இந்த இலைகளில் அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது.  இந்த கீரையை வணக்கி சாப்பிடும் போது நேரடியாகவே எலும்புகளுக்கு கால்சியம் சென்று விடுகின்றது.  இதனால் எலும்பு நல்ல திடமாகவும், அகலமாகவும் வளரும். காலப்போக்கில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவது குறைந்துவிடும்.

சின்னதாக விபத்து நடந்தால் கூடவோ அல்லது யாராவது அடித்தாலோ உடனே எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். இதனால் எலும்பின் பலம் மிக மிக முக்கியம்.  எலும்பு எந்த அளவுக்கு அடர்த்தியாக உள்ளதோ.  அந்த அளவுக்கு உடலில் பலம் அதிகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

இதய கோளாறுகள் உள்ளவர்கள் கூட இந்த பசலைக் கீரையை தினமும் சாப்பிட்டு வரலாம். இதயத்தில் உள்ள  அடைப்புகளை நீக்கி கொழுப்பு நீங்கிவிட்டு அடைப்பை வெளிப்படுத்தும்.  இதனால் இதய நோய் உள்ளவர்கள் பசலைக்கீரையை பயன்படுத்தலாம்.

உடலையும், எலும்பையும் பலப்படுத்தும் பசலைக்கீரையை தினமும் சாப்பிட்டு பலம் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.