விட்டமின் குறைபாட்டை உணர்த்தும் உடற் கோளாறுகள்

CollageVitamin2

நம் உடலில் உள்ள வளமைக்கு காரணம் நமது உயிர்ச்சத்துக்கள் தான் உயிர்ச்சத்துகளில் ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது கிடைக்காமல் போனாலோ உடனே பாதிப்பு அப்பகுதிகளுக்கு வந்து விடும். அதைக்கொண்டு நாம் பாதிப்படைந்த விட்டமின்களை கண்டுபிடிக்கலாம். கண்டுபிடித்த வுடன் அதற்கான உணவுகளை உண்டு அந்த சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

உதடுகளில் தோல் உரிதல் மற்றும் வெடித்து ரத்தம் வருதல் போன்றவைகள் இருந்தால் உதட்டில் ஈரப்பசை தன்மைகள் இல்லை என்று அர்த்தம்.  இதற்காக இரவு உறங்கும் முன்பு உதட்டில் தேங்காய் எண்ணை தேய்த்துவிட்டு உறங்கவும். விட்டமின் பி குறைப்பாட்டால் தான் இந்த வெடிப்பு வரலாம். மேலும் இரும்பு மற்றும் ஜிங்க் போன்ற மினரல்கள் குறைப்பாட்டால் கூட இந்த வெடிப்புகள் வரலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது வேர்க்கடலை, மீன் போன்றவைகளை  உண்ணலாம்.

மாலையில் கண்கள் சற்று மங்கலானாலோ அல்லது வெள்ளை எழுத்துக்கள் கலங்கியவாறு தெரிய ஆரம்பித்தாலோ உடனே இது விட்டமின் ஏ குறைப்பாடு என்று தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த குறைப்பாட்டை போக்க தினமும் இரண்டு வாரத்திற்கு கேரட்டை மிக்ஸியில் நன்றாக அரைத்து சர்க்கரை அல்லது தேன் கலந்து ஒரு டம்ளர் முழுக்க குடிக்கவும்.

சிலருக்கு திடீரென்று முடி கொட்ட ஆரம்பிக்கும். வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பூக்கள் மற்றும் ஹேர் கன்டிசனர்கள் மூலம் இந்த பாதிப்பு வரலாம். ஆனால் சிலருக்கு சத்துக்குறைபாட்டாலும் வரலாம். விட்டமின் கே, ஈ, ஏ போன்ற சத்துக்கள் முடி வளர்வது சம்பந்தமானது.  இந்த குறைபாட்டை போக்க தொடர்ந்து 14 நாட்கள் உயிர்ச்சத்து நிறைந்த கொண்டைக்கடலை, முளைக்கட்டிய பயறு, உலர்ந்த திராட்சை பழங்கள் போன்றவற்றை தினந்தோறும் சாப்பிட்டு வாருங்கள்.

பருக்கள், கொழுப்பு கட்டிகள், கொப்புளங்கள் முகத்தில் மற்றும் உடலில் வந்தால் விட்டமின் டி குறைபாடு என்று தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த குறைபாடு எதனால் என்றால் உடலில் விட்டமின் டி வளம் குறைந்து விடும் அதனால் தான் ஏற்படுகின்றது. இதற்கு உலர்பழங்கள் சாப்பிடுவது நல்லது. மாலை வெயில் முகத்தில் அல்லது உடலில் படுமாறு உடற்பயிற்சிகள் செய்துவிடுவது நல்லது.

பற்களில் பிரச்சினை, இரத்தம் கசிதல், நகம் உடைந்து போதல் போன்ற பிரச்சினைகள் கால்சியம் குறைபாடு. இது விட்டமின் சி பிரச்சினையாகும்.  இதற்கு நெல்லிக்கனி, கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published.