நாட்டு துப்பாக்கி வெடித்து சிறுவன் தொடையில் குண்டு பாய்ந்தது.

sakthidasan_2747985f

செங்கம்: வனவிலங்குகளை வேட்டையாட வைத்த கண்ணியுடன் கூடிய நாட்டு துப்பாக்கியில், கால் வைத்தான் சிறுவன். துப்பாக்கி வெடித்து, அவனது தொடையில் குண்டு பாய்ந்தது. செங்கம் அடுத்த தீ.தாண்டப்பட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் சக்திதாசன், 12. அங்குள்ள அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, ஜவ்வாது மலை அடிவாரத்தில், அவர்களுக்கு சொந்தமாக உள்ள நிலத்துக்கு நீர் பாய்ச்ச சக்திதாசன் சென்றார். அந்த பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட, கண்ணியுடன் கூடிய நாட்டு துப்பாக்கி வைக்கப்பட்டு இருந்தது. நிலத்துக்கு சென்ற சக்திதாசன், தெரியாமல் அந்த துப்பாக்கி மீது கால் வைத்தார்.

இதில் துப்பாக்கி வெடித்து, அதிலிருந்து குண்டு அவரின் தொடையில் பாய்ந்து வெளியேறியது. இதில் அவர் படு காயம் அடைந்து கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணியுடன் கூடிய நாட்டு துப்பாக்கியை வைத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.