What Happened “VIKRAM” in Kerala – Viral Video

download (1)

கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவில் ஒரு ரசிகரிடம் நடிகர் விக்ரம் காட்டிய அன்பு அழகான வீடியோவாக சமூல வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் கேரளாவில் ஒரு தொலைகாட்சி நிறுவனம் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது. அதில் தமிழ் மற்றும் மலையாள சினிமா நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் நடிகர் விக்ரமும் கலந்து கொண்டார். அவர் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது, திடீரென ஒரு மாற்றுத்திறனாளி ரசிகர் ஓடிவந்து அவரை கட்டி அணைத்துக் கொண்டார். விக்ரம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அருகிலிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரை பிடித்து இழுத்து அங்கிருந்து விரட்டினர்.

ஆனால் விக்ரமை அவரை ஒன்றும் செய்யவேண்டாம் என்று கூறி, அந்த ரசிகரை அழைத்து போட்டோ எடுத்துக்கொண்டார். மேலும் அந்த ரசிகர் விக்ரமின் கன்னத்தில் முத்தமும் கொடுத்து அவரை கட்டிக் கொண்டார். விக்ரமும் கோபப்படாமல் அவரை அரவணைத்துக் கொண்டார். அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் விக்ரமின் மனிதாபிமானத்தை பெரிதும் பாராட்டினர்.

https://youtu.be/Vrs4Jk

Leave a Reply

Your email address will not be published.