பீப் பாடல் – சிம்பு இன்று கோவையில் ஆஜரானார்

hqdefault

டந்த ஆண்டு இறுதியில் நடிகர் சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் தமிழ்நாடு முழுவதும் பலத்த சர்ச்சைகளை கிளப்பியது. இந்த விவகாரத்தில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் ஜாமீனில் வரமுடியாத வழக்குகளை பதிவு செய்தனர். மகளிர் அமைப்புகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 12-ந்தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் மீது பெண்களை இழிவுபடுத்துதல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதுபோன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விவகாரத்தில் இசையமைப்பாளர் அனிருத் கடந்த மாதம் நள்ளிரவில் சென்று கோவை போலீசில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் சிம்புவிற்கு பல்வேறு சம்மன்களை அனுப்பியும் கூட அவர் நேரில் ஆஜராவதை முன்ஜாமீன்கள் மூலம் தள்ளிப் போட்டு வந்தார்.
இதற்கிடையே ஆபாச பாடல் விவகாரத்தில் சிம்பு வருகிற 24-ந்தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் நேற்றிரவு கோயம்புத்தூர் சென்றார். அவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சென்று இந்த வழக்கு தொடர்பான விவரங்களை நேரில் கேட்டறிந்தார்.

இந்நிலையில் இன்று காலை 8.10 மணியளவில் விமானம் மூலம் கோவை வந்த சிம்பு கோவை கோட்டூர் போலீஸ் நிலையம் சென்று நேரில் ஆஜரானார்.காட்டூர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பின் நடிகர் சிம்பு அளித்த பேட்டியில், காவல்துறையின் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.