துளசியை ஆண் குழந்தைக்கு கொடுத்தால் என்ன ஆகும்?

769e6b03f31a28319ee40f936f88d876

துளசியைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். எல்லோரது வீட்டிலும் துளசிச் செடியை கண்டிப்பாக வளர்க்க வேண்டும். நான்கு துளசி செடி வளர்த்தால் ஒரு வீட்டிற்கு தேவையான ஆக்ஸிஜனை ஒரு நாள் முழுவதும் சுத்தம் செய்து தந்துவிடும்.

தினமும் துளசியை பறித்து அதை சுடுநீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரை பருகினால் இருமல், தும்மல், சளி, கபம் அனைத்தும் நீங்கிவிடும். காய்ச்சல் ஏற்பட்ட உடம்புக்கு துளசி கசாயம் மிகுந்த நல்லது.

அதே சமயம் துளசியை சாப்பிடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்று வந்து விட்டால் சற்று இதைப் படியுங்கள்.  பெண் குழந்தைகள் நாள் முழுவதும் துளசியை பறித்து உண்டால் கூட ஒன்றும் ஆகாது.  ஆனால் ஆண்குழந்தைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

ஆண் குழந்தைகளுக்கு சிறு வயது தொட்டே துளசியை கொடுத்து வந்தீர்கள் என்றால் இது அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.  ஆண்மைக்குறைவை உண்டாக்கும்.  துளசி உஷ்ணச்செடி, இந்த உஷ்ணம் தான் சுவாசப்பாதையை சுத்தம் செய்து விடுகின்றது. இதனால் சளி ஏற்படுவதில்லை.

அதே சமயம். இது விந்து உருவாவதை கணிசமாக பாதிக்கும்.  நாளடைவில் ஆண்மைக்குறைவையும் உண்டாக்கும். இந்த உஷ்ணப்பிரச்சினையை தடுப்பதற்கு மோர், எலுமிச்சை சாறு போன்ற குளிர்ச்சி தரும் உணவை உடனே கொடுத்து விடவேண்டும்.

ஆண்குழந்தைகட்கு துளசியை தினமும் கொடுக்காமல் வாரம் ஒரு முறை மட்டும் தான் கொடுக்க வேண்டும். அதே சமயம் ஆண்களுக்கு வாரத்திற்கு இரு முறை கொடுக்கலாம். எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சாகும்.

Leave a Reply

Your email address will not be published.