டோனியின் அட்டகாசமான நம்பிக்கை பேச்சு – இன்னும் ஸ்டெம்பை எடுத்துச்செல்வேன்

images

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் அடுத்த குறுகிய காலத்திற்கு இல்லை என்று கூறிய இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் தோனி, இன்னொரு வெற்றி ஸ்டெம்பை வீட்டிற்கு எடுத்துச் செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார். 34 வயதான மகேந்திர சிங் தோனி கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா உடனான தொடரின் நடுவில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து ஒருநாள் தொடர் போட்டிகளில் தோனி அதிகம் ரன் குவிக்காததாலும், அடுத்தடுத்த சில தோல்விகளாலும் தோனியிடம் தொடர்ந்து ஓய்வு குறித்த கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசிய தோனி, “ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை தொடர்களுக்கு பிறகு ஐ.பி.எல் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து நமது அணி 13 டெஸ்ட் போட்டிகளிலும், 5 முதல் 6 ஒருநாள் போட்டிகளிலும் உடனடியாக விளையாட உள்ளது.” என்று கூறினார்.

அப்போது தோனி பேசியதாவது:-

ஓய்விற்கு பிறகு என்னுடைய நாட்களை கழிக்க நான் ஒரு திட்டமிட்டுள்ளேன். வெற்றிக்கு பிறகு நான் வீட்டிற்கு எடுத்து வரும் ஸ்டெம்களை நினைவு கூற தொடங்கினாலே அதற்கு 10 வருடம் பிடிக்கும். அவ்வளவு ஸ்டெம்கள் என்னிடம் உள்ளது.

மேற்கொண்டு இன்னும் ஒரு ஸ்டெம்ப் எடுத்துச் செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. டி20 போட்டிகள் விளையாடுவது மிகவும் சிறப்பானது. அனைத்து தரப்பு போட்டிகளுக்கும் விளையாடக் கூடிய சீரான அணி நம்மிடம் உள்ளது. ஒருசில வீரர்களை மட்டும் மாற்றினால் போதும்.

Leave a Reply

Your email address will not be published.