மொறு மொறுப்பான காளிபிளவர் 65 செய்வது எப்படி

08-chicken65-600

வீட்டில் திடீரென்று விருந்தினர் வந்துவிட்டாலோ அல்லது பிள்ளைகளுக்கு சுவையான நொறுக்குத்தீனி வேண்டுமென்றாலோ சிக்கன் 65 போன்று காளிபிளவர் 65 யை தரலாம்.

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – 1 சிறியது (நறுக்கியது)
தயிர் – 100 மி.லி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கேசரி பவுடர் – 1 சிட்டிகை
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
நறுக்கிய காலிஃப்ளவரை எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் வேகவைத்து பின் இறக்கி கொள்ளவும். நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, பேஸ்ட் போல செய்து கொள்ளவும். (இந்த கலவை அதிக நீராகவும் இருக்கக் கூடாது, கடினமாகவும் இருக்கக் கூடாது) இந்த கலவையில் காலிஃப்ளவரை சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர், எண்ணெய்யில் பொரித்து எடுத்தால், சுவையான காலிஃப்ளவர் 65 தயார்.

Leave a Reply

Your email address will not be published.