ஆஸ்துமாவால் அவதியா?

Man about to use asthma inhaler

ஆஸ்துமா என்பது பரம்பரை நோய், இந்த நோய் உள்ளவர்கள் வெளிப்புற தோற்றத்திற்கு சாதரணமாக இருப்பார்கள் ஆனால் உள்ளுக்குள் மூச்சு இரைத்துக் கொண்டே இருப்பார்கள். இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அது இளைப்பு நோய்.  இந்த நோய் உள்ளவர்களுக்கு கூடவே அலர்ஜியும் வந்துவிடும். அலர்ஜி வந்து விட்டால் வீட்டில் உள்ள குப்பைகளை கூட்டினால் கூட தும்மல் வரும். பூனை, நாய் போன்ற எந்த விலங்குகளை தொடமுடியாது.

மேலும் மூச்சுக்குழல் சுருங்கிவிடும். மூச்சுக்குழல் சுருங்கிவிட்டால் சிறிய துளை வழியாக மூச்சு வேகமாக சென்று வரும்.  மேலும் சளியும் இருமலும் மாற்றி அவஸ்தை தரும்.  சில சமயம் மூச்சு அடைத்துக்கொண்டு விபரீதத்தை உண்டு பண்ணும்.

இந்த நோயை எளிதில் குணப்படுத்த முடியாது என்று வருடக்கணக்கில் மருந்த மற்றும் ஆங்கில மருத்துவத்தில் உள்ள சில உபகரணங்களை பயன்படுத்துவர்.  எது பயன்படுத்தினாலும் கடைசியில் சித்த மருத்துவத்திற்கு தீர்வு எப்போதும் உண்டு.

வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை ஆகியவை ஆகும். இவை அனைத்தையும் பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்.

மேலும் திப்பிலி ரசாயணம் என்று நாட்டு மருந்துக் கடைகளில் கேட்டோமானால் தருவார்கள். இதை தினமும் சுண்டைக்காய் அளவு உருட்டி தினமும் சாப்பிட்டு வர கொஞ்சம் கொஞ்சமாக ஆஸ்துமா நீங்கிவிடும்.

இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒவ்வாமை காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அறிகுறிகள்:
மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

காரணங்கள்:
தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி- கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந் துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.

மூலிகைகள்:
வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.
இவை அனைத்தையும் பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்.
thanks சிவகுமார்

Leave a Reply

Your email address will not be published.