ஐ.எஸ். தலைவரை கொல்பவர் என்னை திருமணம் செய்து கொள்ளலாம் – எகிப்து நடிகை ஷாஹின்

download (1)

ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள். அவர்கள் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள். சமீபத்தில் கூட பாரிஸில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தி ஏராளமான அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், எகிப்து நாட்டை சேர்ந்த ஒரு பிரல நடிகை எல்ஹாம் ஷாஹின்(55) சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது ஐ.எஸ். தீவிரவாதிகள் பற்றி தன்னுடைய கருத்தை கூறினார். அவர் கூறும்போது “ஐ.எஸ் தீவிரவாதிகளின் அமைப்பின் தலைவர் பாக்தாதியை கொல்பவரை நான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். அவர் யாராக இருந்தாலும், எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் கவலை இல்லை.

மேலும், திருமணத்திற்கான அனைத்து செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். அவர் கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு சந்தோஷமான தேனிலவை அவர் என்னுடன் கொண்டாடலாம். அவர் எங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கு நான் அழைத்துச் செல்வேன். அவரின் சேவகியாக இருப்பேன். பாக்தாதியை கொலை செய்தால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் அமைதி திரும்பும் நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

ஷாஹினுக்கு தற்போது 55 வயது ஆகிறது. அவர் எகிப்து நாட்டில் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தேசிய மற்றும் பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.