பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? – பழ. நெடுமாறன்

1455879346-3983

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் எனவும், மீண்டும் ஈழப்போர் தொடங்கும் எனவும் தமிழர் தேசிய இயக்க நிறுவனத்தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருபவர்களை சந்திக்க சென்ற பழ.நெடுமாறன் கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததால் தன் கடந்த முறை திமுக, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்த நிலமைதான் நீடிக்கும் என அவர் தெரிவித்தார். மேலும் பேசிய பழ.நெடுமாறன், வெளிநாடு வாழ் இலங்கை தமிழ் எழுத்தாளர் கூறும்போது இலங்கை அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக கூறியுள்ளது. ஆனால் இந்திய அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக இன்று வரை அறிவிக்கவில்லை.

பிரபாகரன் இறந்து விட்டார் என்றால் இந்திய சிறையில் உள்ள பேரறிவாளான் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும். அதற்காக தான் இந்திய அரசு அதனை மறைத்து வருகிறது என்று கூறியுள்ளார். பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும். பிரபாகரன் உயிருடன் உள்ளார். மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.