குண்டாக இருப்பது கவலையா சோம்பு சாப்பிடுங்கள்

download

ஆண்கள் பெண்கள் என்று அனைவருக்கும் உள்ள ஓரே பிரச்சினை என்னவென்றால் அது உடல் பருமன் தான்.  உடல் பருமனால் அவதியுறுபவர்களுக்கு தீர்வு தான் இந்த சோம்பு.  சோம்பு என்பது உணவில் பயன்படுத்தப்படும் ஒரு மளிகைப்பொருள்.

பெருஞ்சீரகம், வெண்சீரகம், என்று இதற்கு நிறைய பெயர்கள் உண்டு.  இந்த சோம்பை சாப்பிட்டால் உடலில் தேங்கியிருக்கும் ஊளைச் சதைகள் குறைந்து விடும்.  ஊளைச் சதைகள் குறைந்தால் உடல் தானாக ஒல்லியாகிவிடும்.

வீட்டில் பெண்கள் எந்த வேலையும் செய்யாமல் தூங்குவதாலும், தொலைக்காட்சிகளைப் பார்ப்பதாலும் தான் இந்த பிரச்சினை வருகின்றது.  ஆண்களில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதாலும் உடல் பருத்துக்கொள்ளும்.  உடல் பருமன் தான் எல்லோருக்கும் ஒரு பெரிய பிரச்சினை என்றால் அதை குறைத்துவிட வேண்டியது தானே.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சோம்பு இரண்டு டீ-ஸ்பூன் எடுத்து நன்றாக மென்று தின்ன வேண்டும். இதனால் இது உடலுக்குள் சென்று கெட்ட கொழுப்புக்களை அறவே நீக்குகின்றது.

தினம் தோறும் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்புகள் கரைந்து விடும். மேலும் வயிறு சீரணம் ஆகாமல் தவித்துக்கொண்டிருந்தால் கவலைப்படாமல் சிறிது சோம்பை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று தின்னுங்கள்.

இதனால் வயிற்றில் இருக்கும் சீரணமாகாத உணவுகள் முழுவதும் சீரணமாகிவிடும். வாய் துர்நாற்றம் அடிக்காது.  இவ்வளவு நல்லதும் இந்த சீரகத்தில் தான் உள்ளது. தினம் தோறும் சாப்பிட்டு அழகாகிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.