இளநீரின் பருகினால் நன்மைகளை பருகுவீர்கள்

584

குளிர்பானங்களில் மிகவும் சிறந்த ஒன்று அது இளநீர்தான். வேரால் நம்மிடமிருந்து நீரை வாங்கிக்கொண்டு அதை திரும்பவும் மனிதனுக்கே கொடுத்துவிடுகின்றது. இளநீர் பானம் குளிர்ச்சியை மட்டும் மனிதனுக்கு தருவதில்லை. இது பல நன்மைகளை மனிதர்களுக்கு தருகின்றது.

கோடையில் உடல் சூட்டைத் தணித்துக்கொள்வதற்கு உன்னத பானமாக இளநீர் உள்ளது. என்பது மிகையாகாது. இளநீரில் 17.4 சதவீதம் ஆகும். குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற இனிப்புச் சர்க்கரைச் சத்துக்கள் உள்ளன.

இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது. இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம்.

இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது. இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

அதிகம் சாப்பிடுவதால் உண்டாகும் நோய்களான ஜீரணக்கோளாறுகள் மிகவும் அதிகம், இந்த ஜீரணக்கோளாறால் புளித்த ஏப்பம், வாந்தி எடுத்தல், மயக்கம் வருதல் போன்றவைகள் தோன்றுகின்றன.  இந்த அஜீரணம் ஏற்பட்டால் இளநீரை குடித்தால் அமிலத்தன்மை அகற்றப்பட்டு சீரணம் சரியாகிவிடும்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும். சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது.

இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published.