கொடிய விஷத்தையும் போக்கும் பேய்ச்சுரைக்காய் நற்பலன்கள்

images (1)

இதுகுழம்புச் சுரைக்காயைப் போன்றுதான் இருக்கும்.  இதை முற்றவிட்டால் குடுவை போன்று மாறிவிடும் தன்மை உடையது.  இந்த பேய்ச்சுரைக்காய் நற்குணங்கள் நிறைந்தது.  ஆனால் இலை தொடங்கி, பூ, காய், விதை அனைத்தும் கசப்பாக இருக்கும்.

இந்தப் பேய்ச்சுரையின் பெயரைப்போலவே இதன் தன்மையும் அதிகம்.  இந்த பேய்ச்சுரை எவ்வளவு கொடிய விசமானாலும் அதை முறித்துவிடுமாம். அவ்வளவு சக்தி வாய்ந்தது. பேய்ச்சுரையின் வேரை நன்கு அரைத்து விட வேண்டும். இதை விஷத் தீண்டல் ஏற்பட்ட கடிவாயில் வைத்து இறுக்கி கட்டிவிடவேண்டும். உடனே வாந்தி அல்லது பேதி வேகமாக வெளியேறி விஷத்தை வெளியே கொண்டு வந்து விட வேண்டும்.

கட்டு விரியன், கண்ணாடி விரியன் போன்ற பாம்புகள் கடித்தால் உடனே மனிதன் இறந்துவிடுவான் காரணம் இரத்தம் செல்லும் அனைத்து குழாய்களையும் செயலிழக்கச்செய்து விடுகின்றது. இந்த வகை விஷப்பாம்புக்கடிக்கு தயங்காமல் பேய்ச்சுரையை பயன்படுத்தலாம்.

கொடிய விஷமுள்ள பாம்பு கடித்தாலும், கலவரப்படாமல் பேய்ச்சுரைக்காய் இலை மற்றும் சம அளவு தும்பை இலைச்சாறு, இரண்டையும் ஒன்றாக கசக்கி கடிபட்டவரின் மூக்கில் சில துளிகள் விட்டு நன்றாக ஊதிவிட்டோமானால், திடீர் என்று ஏற்படும் தும்மலுடன் எழுந்து கொள்வார்.

நினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். உடன் விஷ் முறிவு ஏற்பட்டு குணம் தெரியும். விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம் முறிவு ஏற்பட்டு சில நாட்கள் வரை பத்திய உணவு மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.

பேய்ச்சுரை எனும் அரிய சஞ்சிவினி மூலிகையை தயங்காமல் பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.