அகில் மரத்தின் நன்மைகள்

aquilara

அகில் மரம் சந்தனக்கட்டைக்கு மாற்றாகும்.  இதில் நிறைய நற்குணங்கள் நிறைந்துள்ளது. பலவித நோய்களை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. காடுகளில் தான் சந்தனமரத்திற்கு காவலாக ஓரங்களில் அகில் மரங்களை வைத்து வளர்ப்பர்.

உடலில் வெப்பத்தை அதிகரிக்க இந்த அகில மரங்கள் பயன்படகின்றன. கல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் ஆற்றலும் இதனிடம் அமைந்திருக்கின்றது.  உடலில் வீக்கங்கள் நிறைய காணப்பட்டால் அகில மரத்தூளை பற்றுப் போட்டால் கரைந்து விடுமாம்.

ஒற்றைத் தலைவலி, மண்டையிடி, சில வகைக் காய்ச்சல், பொதுவான வாத நோய்கள், படை மற்றும் சரும நோய்கள், வாந்தி, அருசி ஆகிய குறைபாடுகளை அகற்றும் ஆற்றல் பெற்றதாகத் திகழ்கிறது அகில். சரியானபடி மருத்துவப் பக்குவம் செய்து சாப்பிட்டால் நரை, திரை போன்ற முதுமைக் கால சருமக் குறைபாடுகளையும் அகற்றி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். உடல் அசதிகளை நீக்கும் வல்லமை பெற்றது.

அகில் கட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 300 கிராம் அளவுக்கு மண் சட்டியில் போட்டு 30 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் பாதியாகச் சுண்டக் காய்ந்ததும் வடிகட்டி ஆற வைத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

வேளைக்கு ஒரு அவுண்ஸ் வீதம் காலை மாலை குடித்துவர உஷ்ணம் தொடர்பான வியாதிகளும், பித்தம் தொடர்பான பிணிகளும் விலகி நல்ல குணம் தெரியும். குறிப்பாக பித்தம் தொடர்பாக ஏற்படும் காய்ச்சலுக்கு இது நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

அகில் கட்டையை நன்றாகக் கொளுத்தி விட வேண்டும். சிறிது எரிந்த பின்னர் நெருப்பை ஊதி அணைத்துவிட்டு அதிலிருந்து வரும் புகையை மட்டும் மூக்கு, வாய் வழியாக உள்ளுக்கு இழுத்தால் கல்லீரல் தொடர்பான வியாதிகள் குணமாகிவிடும்.

வாந்தி ஏற்படும் பொழுது இவ்வாறு புகை பிடித்தால் வாந்தி நின்றுவிடும். சுவாசகோசத்தில் ஏற்படக் கூடிய அழற்சியும் சமன்படும். உடலில் ரணங்கள் ஏற்பட்டிருந்தால் அதன்மீது அகில் புகைபடுமாறு செய்தால் ரணம் வெகு விரைவில் குணமாகிவிடும்.

சருமத்தில் சுருக்கம் அகல அகில மரத்தூளை நன்றாக அரைத்து பால் விட்டு முகத்தில் பூச வேண்டும். ஊளைச் சதை உள்ளவர்கள் உடல் முழுக்க பூசிவிட்டு சிறிது நேரம் கழித்து குளித்தார்கள் என்றால் சருமம் சுருங்கிவிடும்.

அகில் கட்டியைக் கொண்டு ஒரு தைலம் தயாரிக்கலாம். இந்தத் தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புக்களில் உட்புறத்தில் ஏற்படக் கூடிய பல பிணிகளை அகற்றும். தலைவலியையும் குணமாக்கும்

அகில் கட்டை தைலம் தயாரிக்கும் முறை:

அகில் கட்டையைச் சிறி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு நறுக்கப் பட்ட துண்டுகளை 300 கிராம் அளவு சேகரித்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்ச வேண்டும். தண்ணீர் ஒரு லிட்டராக சுண்டக் காய்ந்த பின்பு இறக்கி வடிகட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நீருடன் ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கூட்டி அடுப்பிலேற்றிக் காய்ச்ச வேண்டும்.

அடுப்பிலிருக்கும் சாறு சுண்டும் நேரம் அதிமதுரம் 30 கிராம், தான்றிக்காய் 30 கிராம் தூள் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை பாதிக்கப்பட்ட உறுக்குகளின் உள்ளே விட்டு வரவேண்டும். அகில மரத்தை உடல் முழுவதும் பூசிவிட்டு குளிக்கலாம். இது சருமத்திற்கு நல்லதைச் செய்யும்.

Leave a Reply

Your email address will not be published.