வரதட்சனை கொடுமை : கேட்ட பணம் தராததால் ஆபாச பட இயக்குநருக்கு விற்ற கணவன்

dowry

வரதட்சணை பிரச்சினையால், திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை ஆபாசப்பட இயக்குநருக்கு கணவரே விற்பனை செய்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், ஹரியானாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது பெண் வீட்டார் கூறியபடி வரதட்சணை தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திருமணம் நடந்தது முதல் அப்பெண்ணை புகுந்தவீட்டில் சித்ரவதை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கொடுமையின் உச்சமாக தனது மனைவியை ஆபாசப்பட இயக்குநர் ஒருவரிடம் விலை பேசி விற்றுள்ளார் கணவர்.

பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி வந்த அப்பெண் போலீசில், இது குறித்து புகார் அளித்துள்ளார். இதனிடையே, மணமகனின் குடும்பத்தினர் மொத்தமாக தலைமறைவாகி விட்டனர். இதுதொடர்பாக, பீகார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.