கார்கில் போர் – வாஜ்பாயை முதுகில் குத்திவிட்டோம் : நவாஸ் செரீப் ஒப்புதல்

nawaz-sharif-vajpayee-ap-650_650x400_51427459128

கார்கில் போர், ‘வாஜ்பாயை முதுகில் குத்திய செயல்’ என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இப்போது ஒப்புதல் அளித்துஉள்ளார். கார்கில் பகுதியில் 1999-ம் ஆண்டு பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு விபத்து என்றும் முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயை முதுகில் குத்தியசெயல் என்று நவாஸ் செரீப் ஒப்புக் கொண்டார். கார்கில் போரின்போது பாகிஸ்தானின் பிரதமராக விளங்கியவர் நவாஸ் செரீப் ஆவார். 1998-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரச்சனைகளை விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படுவது என்று ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும், பாகிஸ்தான் கார்கில் பகுதியில் ஆக்கிரமிப்பில் ஈடுபடவே போர் நடந்தது. பேச்சுவார்த்தையானது, கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

பிரதமர் மோடி லாகூர் பயணத்தை அடுத்து, இருநாட்டு வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு இருநாடுகளும் தயாராகி வந்தது, இந்நிலையில் பதன்கோட் விமானப்படை தளம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டு உள்ளது. விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று இந்தியா, பாகிஸ்தானிடம் திட்டவட்டமாக கூறிவிட்டது.

லாகூர் சென்று நவாஸ் செரீப் பேத்தியின் திருமணத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுத்த நிலையில், பதன்கோட் விமானப்படை தளம் மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், முதுகில் குத்தியதாகவே உணரப்படுகிறது.

”நவாஸ் செரீப் ஒப்புதல் தொடர்பாக பாகிஸ்தான் அரசு தரப்பில் இருந்து எந்தஒரு தொடர்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உண்மையானால், ஒரு சாதகமான மேம்பாடு ஆகும்,” என்று டெல்லி அரசு வட்டாரம் தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது.

Leave a Reply

Your email address will not be published.