மனநோயாளிப் பிரிவில் அனுமதி சீட்டு ராகுல் காந்திக்கு வாங்கிய மாணவ அமைப்பினர்

1326796_Wallpaper1

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மனநோய் மருத்துவமனையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், உள் நோயாளியாக சிகிச்சைப் பெற அனுமதி சீட்டு பெற்ற விவகாரத்தில், பாஜக மாணவர்கள் அமைப்பினர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ragul_kgmu

ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனிடையே, லக்னௌவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், மனநோயாளிகளுக்கான பிரிவில் உள் நோயாளியாக அனுமதிக்க, ராகுல் பெயர் மற்றும் அவரது முழு முகவரி பதிவு செய்யப்பட்டு அனுமதி சீட்டு பெறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் வெளியே வந்ததை அடுத்து, அனுமதி சீட்டு கொடுத்த மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனுமதி சீட்டு வாங்கிய 6 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பிரபலமானவர்களின் பெயர்களில் அனுமதி சீட்டு கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுமாறும், மருத்துவமனை ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.