விபத்தில் இறக்கும் தருவாயிலும் உடல் உறுப்புகளை தானம் செய்த இளைஞன்

16bg_bgimg_nela_17_2739866e

கர்நாடகா மாநிலம் கியூபி எனும் ஊரை சேர்ந்தவர் ஹரிஷ். 26 வயதான ஹரிஷ் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கர்நாடகா உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஹரிஷ் தனது ‘பைக்’கில் சொந்த ஊருக்கு சென்றார்.

தேர்தலில் வாக்களித்த பின் நேற்று காலை சொந்த ஊரில் இருந்து பெங்களூருக்கு ஹரிஷ் வந்து கொண்டிருந்தார். காலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திப்பகொண்டனஹள்ளி என்ற பகுதியில் ஹரிஷ் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று அவரை வேகமாக முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி பைக்கின் மீது இடித்ததில் ஹரிஷ் நிலை தடுமாறி லாரிக்கு அடியில் விழுந்தார்.Capture

அப்போது ஹரீஷ் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் ஹரிஷின் உடல் இரண்டு துண்டானது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி உயிருக்கு போராடிய ஹரீஷை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 20 நிமிடம் கழித்து வந்த போலீசார் ஹரீஷை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஹரீஷ் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம், ‘‘நான் பிழைக்க மாட்டேன். என் உடல் உறுப்புகளை தானம் செய்து விடுங்கள்’’ என்றார். மேலும் சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் ‘‘நான் பிழைப்பது கடினம்.

என் உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து தேவையானவர்களுக்கு தானம் செய்யுங்கள்’’ என்று ஹரீஷ் கூறியபடி இருந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. இதனால் ஹரிஷ் கூறியபடி அவர் கண்கள், இருதயம் உள்ளிட்ட உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு பின்னர் அந்த உறுப்புகள் பெங்களூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டன. மேலும் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் வரதராஜை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.