நீ யார்? என்று என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது மு.க.அழகிரி ஆவேசம்

download (4)

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் மு.க.அழகிரி கூறியிருப்பதாவது:–
திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார்? என்றும் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாகவே உழைத்துள்ளேன்.

பல முறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்திருந்தால் அது கட்சிக்காக செய்த தவறாகவே இருக்கும். இது போன்று செயல்பட்டுத்தான் கட்சி மீது நான் பற்றுதலோடும், விசுவாசத்தோடும், இருந்துள்ளேன்.

எனவே கட்சியை பற்றி கவலைப்படவும், கட்சி தவறாக செல்லும்போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது. இவ்வாறு மு.க.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராக பொறுப்பு வகித்து வந்த மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தது குறித்து கருத்து கூறிய மு.க.அழகிரி, தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் கொள்கையே கிடையாது.

எந்தக் கூட்டணியாலும் அதிமுக வை வீழ்த்த முடியாது என்றும், மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் நகைச்சுவையானது என்றும் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, ஆழகிரி கூறியது குறித்து திமுக தலைவர் கருணாநிதி, வெளியிட்ட அறிக்கையில், திமுகவிற்கும் மு.க.அழகிரிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவரது பேச்சுக்களை திமுக வினர் அலட்சியப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

கருணாநிதியின் இந்த கருத்திற்F பதிலளிக்கும் விதமாக மு.க.அழகிரியின் இந்த கருத்து அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.