பச்சை பழங்களில் மறைந்துள்ள சத்துக்கள்

green_vegetable_pile

பழங்கள் என்றாலே சத்துள்ளவைகளாகத்தான் இருக்கும். அதிலும் பச்சை வகை பழங்களில் அதிக குளோரோசோம் ( பச்சையம் ) நிறைந்துள்ளன.  இவைகளை சாப்பிடும் போது சத்துக்களை உடல்கள் தானாகவே ஊறிஞ்சிக்கொள்கின்றன.

பச்சைத் திராட்சை, பச்சை ஆப்பிள், பேரிக்காய், பச்சை வாழைப்பழம், பீன்ஸ், கோஸ் போன்றவை பச்சை நிறம் பழங்கள். குளோரோஃபில், நார்ச்சத்து, லுடீன், கால்சியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் இதில் உள்ளன.

மேலும், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் ரசாயனம் இதில் உள்ளன. இவை புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைப்பது, ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவது போன்ற பணிகளைச் செய்கின்றன.

காய்கறி பழங்கள் பச்சை நிறத்தை குளோரோஃபில்-இல் இருந்து பெறுகின்றன. இந்த குளோரோஃபில் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைத்து, நம் உடலில் புதிய திசுக்கள் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நோய் குணமாகும் வேகத்தை இது 25 சதவிகிதம் வரை விரைவாக்குகிறதாம். எலும்பு, தசைகள் மற்றும் மூளை வலுப்பெற இந்தக் காய்கறியும் பழங்களும் உதவுகின்றன.

பச்சையம் மிகுந்த பழங்களை தின்றோமானால் அதிக பழங்கள் சாப்பிடுவதை விட அதிக சக்திகளை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.