ஆன்மீக தேடலால் ஐ.ஐ.டி மாணவிக்கு ஏற்பட்ட விபரீத எண்ணம்….

1455606110-897

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பரோடு பேட்டையில் வசிக்கும் தொழிலதிபர் புருஷோத்தமன். அவரின் மகள் பிரதியுஷா (26), சென்னையில் ஐ.ஐ.டியில் படித்து வந்தார். மேலும் அவர் ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே தங்கியிருந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி திடீரெனெ மாயமானார். அவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக மூடியே இருந்ததால், இதுபற்றி சந்தேகம் அடைந்த சக மாணவிகள், விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அவரின் அறையை சோதனை செய்தனர்.

அப்போது பிரதியுஷா கைப்பட எழுதியிருந்த இரண்டு கடிதங்கள் சிக்கின. ஒரு கடிதம் ஆங்கிலத்திலும், மற்றொன்று தெலுங்கிலும் எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில் தான் ஆன்மீக தேடலுக்காக இமயமலை செல்வதாக அவர் கூறியிருந்தார். இதுபற்றி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் பிரதியுஷா கடந்த 23ஆம் தேதி கோயம்புத்தூரை சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் ரெயிலில் மும்பை சென்று கொண்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், அவரின் செல்போன் எண்ணை சோதனை செய்தனர். அதில், அவர் தினமும் பலமுறை டோராடூனில் உள்ள சிவ குப்தா என்பவருடன் பேசி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, உத்தரகாண்ட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் டேராடூன் முழுவதும் வீடு வீடாக சோதனை செய்தனர். இறுதியில் பிரதியுஷா சிவகுப்தாவின் ஆசிரமத்தில் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். உடனே அவரை அங்கிருந்து மீட்டனர். இதுபற்றி அவரது தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர் அங்கு விரைந்து மகளை மீட்டார்.

சிவகுப்தா தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு, ஆன்மீக சேவையில் ஈடுபட்டிருந்தார். அவரை பற்றி கேள்விபட்ட பிரதியுஷா அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, தனது ஆன்மீக தேடல் ஆர்வம் பற்றி பேசியுள்ளார். இதனால், கோவையை சேர்ந்த தனது சீடர் பாஸ்கர் மூலம், பிரதியுஷாவை டோராடூன் வரவழைத்தது தெரியவந்துள்ளது. அவரின் ஆஸ்ரமத்தில் இதுபோல் இன்னும் சில பெண்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றி உத்தரகாண்ட் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.