திமுகவுக்கு ஆதரவாக நடிகை நக்மா – எந்த தொகுதியில் வேண்டுமென்றாலும் போட்டியிடுவேன்

Heroine_Nagma

திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று முகப்பேரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நடிகை நக்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

பீகாரில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகித்த கூட்டணி அபார வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ்-தி.மு.க. ஏற்கனவே வெற்றி கூட்டணி, அதை மீண்டும் வரும் சட்டமன்றத் தேர்தலில் நிரூபிப்போம்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி குறித்து விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசைசௌந்தரராஜன், சில மாதங்களுக்கு முன்பு நடந்த வியாபரம் ஊழல் மற்றும் லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா சுவராஜின் பங்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தங்கள் மீது உள்ளதை மறந்துவிட்டு பேசுகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமை அனுமதித்தால், தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நான் போட்டியிடுவேன். அதே நேரம், திமுக தலைமை விரும்பினால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியை பூஜ்ய கூட்டணி என்று அவர் தெரிவித்திருப்பது கண்டத்திற்குரியது. மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் இலவசங்கள் மட்டுமே பொதுமக்களுக்கு அதிமுக அரசு வழங்கி இருக்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.