இளமையில் நரைமுடியா….?

download (1)

இளமையிலே சிலருக்கு நரை முடி வந்துவிடுகின்றது.  இது குடும்பத்தில் உள்ள மரபணுக்களைப் பொறுத்தது. என்றாலும் வேறு சில காரணங்களும் முடி கொட்டவும், வழுக்கையாகவும் உள்ளது. அதாவது வேதிப்பொருட்கள், ஷாம்பூக்கள், ஹேர் கலரிங் போன்றவைகளும் தான் காரணம். அதிகமாக டீ குடிப்பது பித்தத்தை தரும்.

இந்த பித்தநரையையும் இளநரையும் போக்க நிறைய வழிகள் உண்டு அவைகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

அனைத்துக்கும் நெல்லிக்காய் ஒரு சிறந்த நிவாரணி தான்.  நெல்லிக்காய் விதை நீக்கி நன்றாக அரைத்தெடுத்து அதை முடிகளின் வேர் பட நன்றாக தேய்த்து விட்டால் போதும்.  முடியானது நாளைடைவில் கருமை அடைந்து விடும்.

தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் சிறிது கறிவேப்பிலை கலந்து இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து தலையில் தேய்த்துவிட்டு அடுத்த நாள் காலையில் குளித்துவந்தால் நாளடைவில் நரை முடிகள் காணாமற் போய்விடும்.

நான்கு தேக்கரண்டி நெல்லிக்காய்ப் பொடியுடன் இரண்டு எலுமிச்சை சாற்றை கலந்து சிறிது தண்ணீர் கலந்து தலையில் வேர்பட நன்றாக தேய்க்க வேண்டும்.   பின் அரை மணிநேரம் ஊற வைத்து பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும்.

கரிசலாங்கண்ணி இலையை தினமும் பறித்து நன்றாக மைய அரைத்தோமானால் கருமை நிறத்தில் சாந்து கிடைக்கும் இந்த சாந்தை தலையில் தினமும் தேய்த்து வர முடி தன்னால் கருமையாகிவிடும்.

கொத்தமல்லியை அதிகமாக சேர்த்தோமானால் நமக்கு பித்தத்தால் ஏற்படும் நரையானது குறையும்.

Leave a Reply

Your email address will not be published.