முதல் திருநங்கை எஸ்.ஐ யின் அடுத்த கனவு ஐ.பி.எஸ் அதிகாரியாவதுதான்

transgender prathika 250 2

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், எஸ்.ஐ., பயிற்சிக்கு தேர்வாகி உள்ள ,22 பேருக்கு, அதற்கான பணி உத்தரவை வழங்கினார். உத்தரவை பெற்றுக் கொண்ட, சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த கனகராஜ், சுமதி தம்பதியரின் மகள் திருநங்கையான பிரித்திகா யாசினி.

நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவிலேயே போலீஸ் துறையில் இணைந்துள்ள, முதல் திருநங்கை எஸ்.ஐ., என்ற பெருமை எனக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்னும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

மற்ற திருநங்கைகளுக்கு உதாரணமாக திகழும் நான், அவர்களுக்கு என்னாள் முயன்ற அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பேன். திருநங்கைகள் என்னைப் போல், திறமைகளை வளர்த்துக் கொண்டு, போலீஸ் உள்ளிட்ட உயர் துறைகளில் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். திருநங்கைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் துறையில் இணைந்துள்ள நான் படிப்படியாக, என் திறமையை வளர்த்துக் கொண்டு, ஐ.பி.எஸ்., அதிகாரியாவேன். அதை லட்சியமாக கொண்டு பணியாற்றுவேன். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.