சென்னை அணியை விட்டுப்பிரிந்தது வருத்தம் தான் – டோனி உருக்கம்

hqdefault

‘ஐபிஎல் டி20 தொடரின் 9வது சீசனில் புனே அணிக்காக விளையாட இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மறக்க முடியாது’ என்று டோனி கூறியுள்ளார். ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

இதனால், 2016 மற்றும் 2017 ஐபிஎல் தொடரில் புதிய அணிகளாக ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ், ராஜ்கோட் குஜராத் லயன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளன. டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணிக்கான சீருடையை கேப்டன் டோனி அறிமுகம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டோனி கூறியதாவது:

எட்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவிட்டு, தற்போது வேறு அணிக்காக விளையாட இருப்பதால் சூப்பர் கிங்சை மறந்துவிட்டேன் என்று சொல்வது பொய்யாகவே இருக்கும். சூப்பர் கிங்ஸ் அணியை என்னால் எப்போதும் மறக்க முடியாது. அந்த அணியுடனான உணர்வுபூர்வமான உறவு என்றென்றும் நீடிக்கும்.

அதே சமயம், தொழிமுறை ஆட்டக்காரர்கள் என்ற வகையில் புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.கேப்டன் என்ற வகையில் கூடுதல் பொறுப்பு இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் 100 சதவீதத்துக்கும் கூடுதலாக பங்களிக்க முயற்சிப்போம். ரெய்னா, ஜடேஜா, மெக்கல்லம் போன்ற வீரர்களுடன் இந்த முறை இணைந்து விளையாட முடியாதது சற்று வருத்தமாகவே உள்ளது.

ரெய்னாவை எதிர்த்து விளையாட இருப்பது சவால் தான். அவர் மிகச் சிறந்த வீரர். எங்கள் அணியில் கெவின் பீட்டர்சன் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் இருப்பது, எனது பணியை எளிதாக்கிவிட்டது. இவ்வாறு டோனி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.