காதலிக்காத பெண்ணை வழிமறித்து ஆசிட் வீச்சு – பெண் வன்கொடுமை தமிழகத்தில்

Acid-Thrown-at-Woman-Doctor

காஞ்சிபுரம் அருகேயுள்ள அமனம்பாக்கத்தைச் சேர்ந்த நல்லத்தம்பி என்பவரின் மகள் கோமதி(25), கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் மாரிமுத்து என்ற இளைஞர் அந்த பெண்ணை கடந்த சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற கோமதியை பின்தொடர்ந்து சென்ற இளைஞர், தம்மை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.

அப்போது, கோமதிக்கும் இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், தன்னுடைய கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து திடீரென கோமதியின் முகத்தில் ஊற்றினார்.

அப்போது, கோமதி வலியால் துடித்து கொண்டு இருந்தார். இதைப்பார்த்த கோமதியின் உறவினர்கள் தப்பியோட முயன்ற மாரிமுத்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த கோமதி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அச்சிறுப்பாக்கம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இதை தவிர்க்க அரசாலும் மட்டும் முடியாது.  பெண் விரும்புவதும், விரும்ப மறுப்பதும் அவளது உரிமை.  ஒரு ஆணுக்கு எந்த வித தடைகளும் எப்போதும் இருப்பதில்லை. இதனால் ஆண்களின் காதல் வாழ்க்கை எளிது.  ஆனால் ஒரு பெண் தன் குடும்பம், மானம், வேலை, எதிர்காலம் என அனைத்தையும் தீர்மானித்து தான் ஆகவேண்டும்.

பெண் எதிர்ப்பு தெரிவிக்காமல் காதலுக்கு கொடியசைத்துவிட்டு, சிறிது நாட்கள் கழித்து விட்டுச் சென்றால் ஆண்கள் தான் மிகவும் பாதிப்படைவார்கள்.  அதனால் இந்த மாதிரி நல்ல உள்ளம் படைத்த பெண்கள் ஆரம்பத்திலேயே தடை செய்து விடுகின்றனர்.  ஆனால் அவர்களுக்கு நேர்ந்ததோ ஆசிட் வீச்சு… என்று ஒரு ஆண் ஒரு பெண்ணை நிமிர்ந்து பார்க்கும் போது தாயாகவும், தமக்கையாகவும் பார்க்கின்றானோ. அன்று அவன் நல்லவனாகின்றான். பெண்கள் இந்நாட்டின் கண்கள்.

Leave a Reply

Your email address will not be published.