ஆபத்தான நிலையில் நின்றுகொண்டு செல்பீ எடுத்தால் அபராதம் – மும்பை

maxresdefault

செல்பி மோகம் உலகம் முழுவதும் வேகமாக பரவி விட்டது. ஆபத்தான இடங்களில் நின்றுக் கொண்டு செல்பி எடுப்பதன் காரணமாக உயிர் இழக்கும் சம்பவங்களும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நாட்டின் நிதி தலைநகரான மும்பை பெருநகரிலும் இந்த செல்பி மோக உயிரிழப்புகள் தொடங்கி உள்ளன.

மும்பை பாண்டு ஸ்டாண்டு கடற்கரையில் கடந்த மாதம் செல்பி எடுக்கும் போது 2 கல்லூரி மாணவிகள் தவறி கடலில் விழுந்தனர். அந்த வழியாக சென்ற ரமேஷ் என்பவர் கடலில் குதித்து மாணவி அன்சும் கானை மீட்டு கொண்டு வந்தார். பின்னர் ரமேஷும், மாணவி தருனும் அன்சாரியை மீட்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், மும்பையில் பாந்திரா பாண்டு ஸ்டாண்டு கடற்கரை உள்பட 15 இடங்களில் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்க மும்பை போலீஸார் முடிவு செய்து உள்ளனர். மேலும் தடையை மீறி ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பவர்களுக்கு மும்பை போலீஸார் ரூ.1,200 அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது செல்பி மோகத்தால் உயிரிழப்பதை தடுக்கவே இந்த என்றார்.

Leave a Reply

Your email address will not be published.