முள்ளங்கியின் நற்குணங்கள்

mooli_mullangi_radish

முள்ளங்கியில் வென்முள்ளங்கி மற்றும் சிவப்பு முள்ளங்கி. என இரு வகைகள் உள்ளன. இந்த இரண்டு முள்ளங்கிகளும் ஒத்த மருத்துவ குணங்களே உள்ளன.

நம் முன்னோர்கள் ஒரு பொருளுக்கு பெயர் வைக்கும் பொழது அதன் பயன்கள் மற்றும் அதன் பண்புகளை வைத்தே பெயர் இடுகின்றனர் அந்த வகையில் முள்ளங்கியை பார்க்கும்போது இதற்கும் ஒரு சரியான காரணப்பெயரை நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள்.

முள்ளங்கி என்ற வார்த்தையை இரண்டாக பிரிக்கும் போது முள் மற்று அங்கி என்று இருவார்தைகள் வருகிறது அதாவது இந்த முள்ளங்கி நம் உடலுக்கு ஒரு கவச சட்டைபோல் காக்கிறதாம். முள்ளங்கியில் மிக அதிகமான கந்தக சத்து இருக்கிறது..

50 ml முள்ளங்கி சாறில் ஒரு டம்ளர் மோர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து தினம் காலையில் வெறும் வயிற்றில் பருகி வர மூல நோயை குணமாக்குமாம் மூலத்தினால் ஏற்படும் வலியும் கடுப்பும் குறைக்கும். வயிற்று எரிச்சலை போக்கக்கூடியது.

வயிற்று புண்னை ஆற்றக்கூடியது. பசியை தூண்டக்கூடியது மேலும் சிறுநீரகத்தை சரியாக வேலை செய்ய வைக்கிறது.

முள்ளங்கியை கடையில் இப்போது அதன் தழைப்பகுதியோடு விற்கின்றனர்.  இது நல்லதுதான் அதன் தழையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியப்பின் அதனை கீரையை வணக்குவது நன்றாக வணக்கி சாப்பிடலாம்.  இது உடலுக்கு மிகுந்த நல்லது.

Leave a Reply

Your email address will not be published.