வலிப்பு வாதம் பித்தம் போன்ற நோய்கள் நீங்க

3_2053126g

வலிப்பு நோய் வரும் போது நோயாளி  தன் சுய நினைவை இழந்து விடுவார்.  அவரால் தன்னை கட்டுப்படுத்த முடியாது மூளை தரும் கட்டளைகளை உடல் நரம்புகள் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லாது.  இதனால் வலிப்பு வரும் போது நோயாளிக்கு அடுத்தவர் மட்டுமே உதவி செய்ய முடியும்.

வலிப்பு இரும்புச் சத்து குறைபாட்டால் தான் வரும்.   இந்த இரும்புச் சத்து குறைப்பாட்டால் தான் பல நோய்கள் வந்து தொந்தரவு செய்யும்.  அதில் இந்த வலிப்பு நோயும் ஒன்று. வலிப்பு நோய் காரணம் பெற்றோர் வழியாகவும் இருக்கலாம்.  ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு வலிப்பு நோய் பரவிவிடும்.

இந்த வலிப்பு நோயை குணமாக்க சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை கசாயம் செய்து ஒரு மண்டலம் கொடுங்கள். வலிப்பு வருவது நின்றுவிடும்.  குளிர்ச்சி அதிகமாக சேரக்கூடாது.

வாத நோய்கள் தீர் முடக்கத்தான் கீரை தான் சிறந்த பலன் தரும் மூலிகை.  முடக்கு வாதம், மூட்டு வாதம் போன்ற நோய்கள் இதன் மூலம் குணமாகிவிடும்.  நல்வேளைக் கீரை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் தீரும்.

புதினா இலைச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு இரண்டையும் சம அளவு கலந்து சாப்பிட்டால், வாந்தி சுவையின்மை, ருசியின்மை போன்ற பிரச்னைகள் குணமாகும். வாந்தி போன்றவை நீங்க எலுமிச்சை சாற்றை பிழிந்து உப்பு கலந்து நாக்கில் விட்டுக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.