கசகசாவின் மருத்துவகுணங்கள்

download

கசகசாவை எல்லோரும் பார்த்திருப்போம் கறி சமைக்கும் போது குழம்பு கெட்டியாகவும் வாசமாகவும் ருசியாகவும் இருக்க சாந்துடன் சேர்த்து அரைத்து குழம்பில் போடுவர்.  இதனால் குழம்பு மண மணக்கும்.

இந்த கசகசாவுக்கு அதீத சக்திகள் உள்ளது.  தினமும் இதை சாப்பிட்டு வந்தால் இளமை நீடித்து இருக்கும்.  தோல் சுருக்கங்கள் நீங்கிவிடும்.  பசும்பாலுக்கு இணையானது கசகசா.   கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும்.

கசகசா உடலை பலப்படுத்தும். ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும். மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது.

கசகசாவை இரண்டு டீ-ஸ்பூன் நன்றாக மென்று பால் வர சாப்பிட்டால்.  இரவில் மயக்கம் வந்து நிம்மதியாக தூங்கிவிடலாம்.  எவ்வித தொந்தரவும் இருக்காது. வயிற்றுப்போக்கு நில்லாமல் போய்க் கொண்டே இருந்தால், கவலைப் பட வேண்டாம். உடனே சிறிது கசகசாவை மென்று பால் வர சாப்பிட்டால் போதும் வயிற்றுப் போக்கு நின்று விடும்.

 

Leave a Reply

Your email address will not be published.