வடகொரியாவின் ராணுவ தளபதியை சுட்டுக்கொன்ற வடகொரிய அதிபர்

images (30)

வடகொரியாவில் ஊழல் குற்றச்சாட்டின்பேரில் ராணுவ தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார். வடகொரியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த கிம் ஜாங் இல் 2011–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28–ந் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது மகன் கிம் ஜாங் அன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார்.

தனக்கு அடிபணியாதவர்களை, தவறு செய்கிறவர்களை, ஊழலில் ஈடுபடுகிறவர்களை அவர்கள் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி மரண தண்டனை விதித்து சுட்டுக்கொல்ல வைப்பது கிம் ஜாங் அன் வழக்கம்.

அவர் பங்கேற்ற ராணுவ அணி வகுப்பு ஒன்றில் தூங்கி விட்டார் என்பதற்காக ராணுவ மந்திரி ஹயோன் யாங் சோல்லை பதவியை விட்டு நீக்கியதுடன், விமான எதிர்ப்பு பீரங்கியால் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்ல வைத்தார்.

இப்போது ராணுவ தளபதி ரி யாங் கில் அரசியலில் பிளவு ஏற்படுத்தியதுடன், ஊழலிலும் ஈடுபட்டார் என்று கூறி, அவருக்கும் கிம் ஜாங் அன் மரண தண்டனை விதித்து, அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டாலும், தகவல் இப்போதுதான் கசிந்துள்ளது.

கிம் ஜாங் அன் எங்கு சென்றாலும், அவருடன் ராணுவ தளபதி ரி யாங் கில் உடன் செல்வது வழக்கம். சமீபத்தில் அங்கு கிம் ஜாங் அன் பங்கேற்ற நிகழ்ச்சி எதிலும் அவர் இல்லை.வடகொரியா செயற்கைக்கோளை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியபோது, நடந்த வெற்றி கொண்டாட்டங்களிலும் அவர் இல்லை.

இதையடுத்து அவர் என்ன ஆனார் என்ற கேள்வி எழுந்தது. அதைத் தொடர்ந்துதான் இப்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.