தன் குழந்தையின் போட்டோவை மற்றொருவன் டேக் செய்ததால் மனைவிக்கு தர்ம அடி

1455092314-0169 (2)

மலேசியாவில் பினாங் நகரில் வசித்து வருபவர் ஸ்டெல்லா ஓய் என்ற பெண். சமீபத்தில் ஃபேஸ்புக்கில் தவறுதலாக எதிர்பாராவிதமாக நடந்த சம்பவத்தால் தானது கணவரின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.

அப்படி என்ன நடந்தது ஃபேஸ்புக்கில்?, சமீபத்தில் ஸ்டெல்லா ஓய்க்கு குழந்தை பிறந்தது. அவர் குழந்தையின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார், அது ஷ் டடோ லீ (SH Dato Lee) என்பவருக்கு டேக் செய்யப்படிருந்தது. டாக் செய்யப்பட்டிருந்த அந்த நபர் ஸ்டெல்லாவுக்கு முன்பின் தெரியாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு ஒரு நபருக்கு ஸ்டெல்லா தனது குழந்தையின் புகைப்படத்தை பார்த்த அவரது கணவர் கடும் கோபம் கொண்டு ஸ்டெல்லாவை கடுமையாக, காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளார். இதனால் ஸ்டெல்லாவின், தலை, கண், கைகள், கால் என அனைத்து பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் உண்மையில் ஸ்டெல்லா அந்த நபருக்கு டேக் செய்யவில்லை, ஃபேஸ்புக்கில் யார் வேண்டுமானாலும் எந்த புகைப்படத்தையும் டேக் செய்யலாம் என்ற ஒரு வசதி இருக்கு, இதன் மூலம் தான் இந்த டேக் தவறுதலாக நடந்திருக்கிறது என ஸ்டெல்லா விளக்கமளித்துள்ளார்.

ஆனால் அவரது கணவர் ஸ்டெல்லாவுக்கும், அந்த புதிய நபருக்கும் தவறான தொடர்பு இருக்கிறது என்ற தவறான புரிதலில் ஸ்டெல்லாவை கடுமையாக தக்கியுள்ளார். தாக்குதலுக்கு ஆளான ஸ்டெல்லா, கணவரால் தான் பாதிக்கப்பட்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது கணவர் மீது காவல் துறையில் புகர் அளிக்க முடிவெடுத்துள்ளதாகவும். இப்படியொரு சம்பவம் நடந்த பிறகு இவருடன் தான் சேர்ந்து வாழ விரும்பவில்லை என ஸ்டெல்லா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.