அதிசயம் இறந்த குழந்தை மீண்டும் உயிர்ப்பித்தது

china_baby

சீனாவின் ஷைஜியங் மாகாணத்தில் குறை பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாகக் கருதி இறுதிச் சடங்குகள் செய்த போது கண்விழித்து பார்த்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சீனாவில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனை ஒன்றில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு 23 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையின் உடல்நிலை மோசமாகி மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் போது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால், குழந்தையை மருத்துவமனையின் பிணவறையில் வைத்திருந்தனர். சுமார் 15 மணி நேரம், 12 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் குழந்தை இருந்தது.

பிறகு, இறுதிச் சடங்கு நடக்கும் மைதானத்துக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்ட போது, அங்கு, குழந்தை அசைவதையும், முணகுவதையும் பார்த்த பெற்றோர், உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.

மருத்துவமனையில் குழந்தை இறந்து விட்டது என்று நினைத்து பிணவறைக்கு எடுத்துச் செல்லும் முன் குழந்தைக்காக தந்தை வாங்கிய கனமான போர்வை குழந்தைக்கு குளிர் தாக்காமல் இருக்க சுற்றி எடுத்துச் சென்று வைத்திருக்கின்றார். இந்த  போர்வைதான் குழந்தையை குளிரில் இருந்து காப்பாற்றி உள்ளது.

இறந்த குழந்தை மீண்டும் உயிர்ப்பித்தது, மருத்துவ உலகில் நடந்த அதிசியம் தான் என்று சைனீஸ் டாக்டர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.