கையும் காதலுமாக சிக்கிய கள்ளக்காதலியையும் கணவனையும் புரட்டி எடுத்த மனைவி

wife3

சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் ஒரு பெண், தனது கணவனின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். அந்த நபர் பெயிண்டராக வேலை செய்கிறார். சம்பவத்தன்று, அவர் தன் மனைவியிடம் அம்பத்தூர் செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

ஆனால் அவருக்கு தெரியாமல் அவரின் மனைவி பின் தொடர்ந்துள்ளார். அவர் நேராக சென்ட்ரல் ரயில்வே நிலையம் சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து யாருக்கோ செல்போனில் பேசினார். ஐந்து நிமிடங்களில் அங்கு ஒரு பெண் வந்திருக்கிறார். இருவரும் ஜாலியாக கை கோர்த்து ரயில் நிலையத்தை சுற்றி வந்துள்ளனர். அதன் பின் ஐஸ் கிரீம் சாப்பிட்டுள்ளனர். இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அவரின் மனைவி, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவர்களின் அருகில் சென்றுள்ளார்.

திடீரென தன் மனைவி வந்ததை பார்த்த அவரின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் ‘யார் இவள்?’ என்று விசாரித்திருக்கிறார். பதில் கூற முடியாத கணவர் ‘நீ வீட்டுக்கு போ. நான் வந்து சொல்கிறேன்’ என்று சமாதனப்படுத்தியிருக்கிறார்.

ஆனால் கோபமடைந்த அவரின் மனைவி அவரையும், அவரின் கள்ளக்காதலியையும் அங்கேயே அடித்து துவைத்து விட்டார். இதைக் கண்ட ரெயில்வே ஊழியர்களும், அங்கிருந்த பயணிகளும் ஓடி வந்து அவரை சமாதனம் செய்தனர். ரெயில்வே போலிசார், அந்த பெண்ணின் கணவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினர். இந்த சம்பவம் சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.