பஞ்சாப் சிங் தலைப்பாகையை கழட்ட மறுப்பு – விமானநிலையத்தில் வாக்குவாதம்

1455012956-672

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அலுவாலியா(41). இவர் சில ஹாலிவுட் படங்களிலும், சில ஆங்கில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் வேலை நிமித்தமாக மெக்சிகோ நகருக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவர் நேற்று நியூயார்க் திரும்புவதற்காக ஏரோமெக்சிகோ விமானத்தில் செல்லவிருந்த அவரிடம் குடியுரிமைத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பான பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். அப்போது தலைப்பாகையை கழற்றும்படி அவரிடம் கூறியுள்ளனர். இதற்கு அலுவாலியா மறுத்துள்ளார்.

தலைப்பாகை என்பது எனது மதம்சார்ந்த நம்பிக்கை. பொது இடங்களில் தலைப்பாகையை நான் கழற்ற முடியாது என்று அவர் பதிலளித்தார். ஆனால் அதனை ஏற்றுகொள்ளாத அதிகாரிகள், இந்த விமானத்தில் மட்டுமல்ல, வேறு எந்த ஏரோமெக்சிகோ விமானத்திலும் நீங்கள் பயணிக்க முடியாது எனக்கூறி அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து அவர் அமெரிக்காவில் வாழும் சீக்கியர் அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு அவர்கள் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.