நன்றாக பசியெடுக்க வேண்டுமா…?

download (26)

சிலருக்கு என்ன ஆனாலும் பசி மட்டும் வாராது…….அவர்களுக்கு பசி வராமலே நேர நேரத்திற்கு சாப்பிட வேண்டுமே என்று சாப்பிடுகின்றார்கள்.  இவ்வாறு சாப்பிடுவதால் என்ன ஆகப்போகின்றது.?  நன்றாக பசியெடுத்து சாப்பிட வேண்டுமே தவிர மற்ற வேளைகளில் சாப்பிடும் சாப்பாடு உடலில் ஒட்டாது.

நன்றாக பசியெடுக்க ஏற்கனவே சாப்பிட்ட சாப்பாடு நன்றாக செரிக்க வேண்டும்.  இந்த சாப்பாடு செரித்தால் தான் அடுத்த சாப்பாடு வயிறு ஏற்கும்.  வயிற்றில் இருக்கும் உணவு செரிக்க நிறைய வழிகள் உள்ளன. வயிறு மந்தம் குணமாக நிறைய வழிகள் உள்ளது.

வயிறு மந்தம் குணமாக வழிகள்

வயிறு மந்தமாக இருந்தால் சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் பசியெடுத்து நன்றாக சாப்பிட முடியும்.

சீரணம் நன்றாக இஞ்சியை சாறு பிழிந்து அல்லது நசுக்கி கொதிநீரில் போட்டு கொதிக்க வைத்து பின் அந்த தண்ணீரில் சர்க்கரை அல்லது பனைவெல்லம் கலந்து சாப்பிட குணமாகும்.

அதிக கொழுப்பு நிறைந்த எண்ணெய் பொருட்கள் மற்றும் வயிற்றை அடைத்துக்கொள்ளும் ரொட்டி போன்ற உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம்.  இவைகள் செரிமானமாக வெகு நேரம் எடுத்துக்கொள்ளும்.

மதிய உணவு உண்ணும் போது மதிய உணவுடன் ரசத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் வயிறு முழுவதும் உணவு இருந்தாலும் ரசம் அனைத்தையும் செரிமானம் செய்து விடும்.

இஞ்சி மிட்டாய், மற்றும் சாதரண புளிப்பு மிட்டாய்கள் போன்றவற்றை உணவுக்கு பின் வாயில் போட்டு உமிழ்நீரை பெருக்கி உண்ணவும்.  இது செரிமானத்தை மேலும் தூண்டிவிடுகின்றது.

உணவு உண்ணும் போது டிவி, பேப்பர், போன்றவற்றை கவனித்துக்கொண்டு உண்ணக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published.