அல்சர் நீங்க மேற்கொள்ள வேண்டிய வழிகள்

Stomach-Ulcer-Symptoms-How-to-Check-Symptoms-of-Stomach-Ulcer-540x330

அல்சரைப் பற்றி அனைவருக்கும் தெரியும் அல்சர் என்பது வயிற்றை பட்டினி போடுவதாலும், சரியான உணவு முறைகளையும் உட்கொள்ளாததால் உருவாகும் நோயாகும்.  ஒரு முறை அல்சர் வந்து விட்டால் அதற்குப்பின் அடிக்கடி இந்த அல்சர் வந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கும்.

அல்சர் வருவதற்கான அறிகுறிகள்

அல்சர் வந்து விட்டால் முதலில் வாயில் தான் புண் வரும்.  பின்னர் நாக்கு தொடங்கி தொண்டை வரை புண் உருவாகும்.

வயிற்றில் புண்வந்து, வயிற்று வலியை தொடர்ந்து தந்து கொண்டே இருக்கும்.  வயிற்றில் புண் இருந்தாலும் இதே பிரச்சினைதான்.

வயிற்றெரிச்சல், பசியின்மை, பசியெடுத்து சாப்பிட்டாலும் வலி எடுத்தல். போன்ற அனைத்து பிரச்சினைகளும் வந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்.

தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி, செரிமானமின்மை போன்ற பல பிரச்சினைகள் வரும்.

காரணங்கள்

தினமும் சரியான நேரங்களில் சாப்பிட வேண்டும்.

வயிற்றில் அதிகமாக அமிலம் சுரக்கப்படும் போது உணவு அல்லது தண்ணீரை குடித்து அதை ஈடு கட்ட வேண்டும். இது செய்ய வில்லை என்றால் அமிலம் புண்ணில் பட்டு எரிச்சலை உண்டாக்கும்.

பட்டினி, விரதம், உண்ணநோன்பு போன்றவை பழக்கப்படாமல் உடனே எடுக்கக்கூடாது.  இது அல்சரை வயிற்றில் எளிதாக உருவாக்கிவிடும்.

காலையில் கண்டிப்பாக உணவு உண்ண வேண்டும்.

தீர்க்க வழிகள்

அல்சர் வந்தவுடன் ஆரம்பத்திலேயே அதை சரிசெய்து விட வேண்டும்.  இல்லையேல் வயிற்றில் புண் அதிகமாகிவிடும். தேங்காய் துருவலை காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் போது வாயில் போட்டு மென்று பாலை விழுங்க வேண்டும். இந்தப் பால் வயிற்றுக்குள் சென்று புண்ணை ஆற்றிவிடும்.

அல்சர் வந்தால் காலையில் தயிர் சாதம் சாப்பிட வேண்டும். காரம், உப்பு போன்றவைகளை சேர்க்கவே கூடாது.

அல்சர் குணமாக தினமும் காலையில் நீராகாரம் வெங்காயம் போன்றவைகளை சாப்பிட வேண்டும்.

திராட்சைப்பழத்தின் சாற்றை வெறும் வயிற்றில் குடித்தால் புண்கள் ஆறிவிடும். இதனால் அல்சர் உடனே குணமாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.