கண்மணி பெண்கள் பருமடைய குண்டுமணி இலைகள்

Paintings of rural indian women - Oil painting (4).forblog

சில பெண்குழந்தைகளை பார்த்தோமானால் வயது 10 கூட ஆகாது வயதுக்கு வந்துவிடுவார்கள். சிலபெண்கள் 16 வயதாகியும் வயது வராமல் இருப்பார்கள்.  இதற்கு காரணம் உடலில் உள்ள சத்துக்குறைபாடுகள் தான்.  கருப்பப்பை முழுமையாக வளர்ந்து ஒரு கருமுட்டையை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தால் தான் பருமடைவார்கள்.

இந்த பெண்குழந்தைகள் பருவமாக ஹார்மோன் மாற்றமும் மிக முக்கியமும்.  ஹார்மோன்கள் அதிகரிப்பதால் பெண்களின் வளர்ச்சி மிக முக்கியம். இதற்கு வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கவனம் இந்த மருந்தை ஒரே ஒரு முறைதான் கொடுக்க வேண்டும்.

பாதி கை அளவு குண்டுமணி இலையைக் கொண்டு வந்து அதே அளவு சுத்தம் செய்த எள்ளையும், வெல்லத்தையும் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடித்து ஒரு எலுமிச்சம்பழ அளவு எடுத்து ஒரு நாளில் ஒரே ஒரு முறை தின்னக் கொடுத்து விட்டால் சில நாட்களில் ருதுவாகி விடுவார்கள். ஒரு சில பெண்களுக்கு ஆரம்பத்தில் அதிக இரத்தம் வெளியேறும் இது உடல் வாசியைப் பொறுத்தது.

அதிக அளவில் இரத்தம் வெளியேறினால், வாழைக்காயின் தோலை சீவி விட்டு காயை மென்று தின்னச்செய்தால், இருத்தப் போக்கு படிப்படியாகக் குறைந்து விடும். அதன் பின் மாதாமாதம் ஏற்படக்கூடிய மாத விடாய் ஒழுங்காக நடைபெறும். இந்த மருந்தை ஒரு முறைதான் கொடுக்க வேண்டும். மறுமுறை கொடுக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published.