உடலுக்கு அழகுதரும் நார்க்குளியல்

p43a

நாம் தினந்தோறும் குளிக்கின்றோம். தினமும் சோப்பு தேய்த்து குளிக்கின்றோம்.  வாசனையான சோப்புகள் பயன்படுத்துகின்றோம். உடலுக்கு நன்மை தருமா இல்லையா என்று கூட எதுவும் பார்க்காமல் தினந்தோறும் பயன்படுத்துகின்றோம்.  உடலை அழுக்குப் போக தேய்த்துக்குளிக்கின்றோமா என்று கேட்டால் பலரது பதில் வியப்பு மட்டுமே.  ஆமாம் உண்மை என்னவென்றால் சிலர் மட்டுமே ஸ்கிரப்பர் பயன்படுத்துகின்றனர்.  பலர் வெறுமனே தேய்த்து குளித்துவிட்டு வந்துவிடுகின்றனர்.

தினமும் நாம் குளிக்கும் போது முதுகு மட்டும் உடலில் உள்ள அழுக்குகள் தேய்க்கும் போதே சென்றுவிடும். ஆனால் கம்கட்டு, கால் இடுக்கு, கழுத்து, பாதம், கெண்டைக்காய், முட்டி, போன்றவைகளில் உள்ள அழுக்குகள் அங்கேயே தங்கிவிடும்.  நாளாக நாளாக பூஞ்சைகளாக மாறிவிடும். அரிப்பு நோயை உண்டாக்கும்.  இல்லையேல் அந்தப்பகுதி மட்டும் கருப்பாக மாறிவிடும்.

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் எண்ணெய் தேங்கி தேங்கி கருமையாக மாறிவிடும். இதற்கு சுத்தமாக ஸ்கிரப்பரைக் கொண்டு தேய்க்க வேண்டும்.  பிளாஸ்டிக் ஸ்கிரப்பரை விட தேங்காய் நார் மற்றும் பீக்கன்காய் நார், வெட்டிவேர் நார் போன்றவை நல்லது.  இந்த நார்களை சேகரித்து தண்ணிரில் இரவு ஊற வைத்து தினமும் குளிக்க பயன்படுத்தலாம். இளநீர் கடைக்காரரிடம் கேட்டாலே தேங்காய் நாரை உரித்துக்கொடுப்பார்.

இந்த தேங்காய் நார் உடலுக்கு குளிர்ச்சியை தரும். உடலில் தேங்கும் அழுக்குகளை நீக்கிவிடும். புண்கள் கொப்புளங்கள் நீங்கிவிடும். மேனி பளப் பளப்பாக இருக்கும். வெட்டிவேர் வாசனையாக இருக்கும். உடலை விட்டு வாசம் நீங்கவே நீங்காது.

இனிமேல் குளிக்கும் போது சோப்புடன் நார் தேய்த்து குளித்து உடலை வளமாக்கிக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.