வயதானவர்களுக்கு வரும் இருமல், சளி பிரச்சினைகளை நீக்க வேண்டுமா…?

images (22)

குளிர்காலங்கள் மற்றும் காலைநேரங்களில் சற்று பனி அதிகமாக இருக்கும் வீட்டில் பெரியாவாக்கள் இருந்தால் அவர்களுக்கு சளி, இருமல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும்.  இந்த சளிப்பிரச்சினைகளால் தொடர்ந்து இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகள் வந்து சிரமப்படுவார்கள். நம்மை காப்பாற்றிய அவர்களை துன்பப்பட விடலாமா அவர்கள் காலம் தீரும் வரையில் சேவை செய்வது நம் தலையாக கடமை.

ஆயுள் முழுக்க சுவாசித்த காற்றில் உள்ள தூசுக்கள் மற்றும் வயதானதால் தடித்த சுவாசக்குழாய்களின் விட்டம் குறைந்து விடும்.  விட்டம் குறைவதால் நுரையீரலுக்கு தேவையான காற்றை சுவாசித்தலின் மூலம் எடுத்துக்கொள்ள முடியாது.  இதனால் மூச்சுத்திணறல் மற்றும் மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படும்.

நிலைமை இப்படி இருக்க இந்த குறைந்த விட்டமுடைய சுவாசக்குழாயில் சளியும் வந்துவிட்டால் அந்த சளியை வெளியே தள்ள முடியாமல் அடிக்கடி தும்மல், இருமல் போன்றவைகைகள் வந்து கொடுமை செய்து விடும். இது தான் அவர்கள் இருமுவதற்கும் சளிக்கும் காரணம்.

நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களின் சுவாசக்குழாயை விரிவடையச்செய்வது தான். கீழேக் கொடுக்கப்பட்டுள்ள கசாயம் தினமும் அவர்களுக்கு கொடுங்கள்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் – 200 மிலி.

பனவெல்லம் பொடித்தது – 2 டீ-ஸ்பூன்.

சுக்கு பொடித்தது – 1 டீ-ஸ்பூன்.

டீத்தூள் – 1/2 டீ-ஸ்பூன்.

மிளகு பொடித்தது – 10 மிளகு.

சித்தரத்தை பொடித்தது – 1 டீ-ஸ்பூன்.

செய்முறை

பால் சேர்க்காமல் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மேற்கொடுத்துள்ள எல்லாவற்றையும் கலந்து 2 நிமிடம் நன்றாக சாறு இறங்க கொதிக்க வைத்து கடைசியாக வடிகட்டி காலையில் எழுந்தவுடன் கொடுங்கள்.  இரவு தூங்குவதற்கு முன்னரும் கொடுங்கள். மிதமான சூட்டில் கொடுத்தால் அவர்கள் பருக ஏதுவாக இருக்கும்.

எந்தக்காரணம் கொண்டும் சர்க்கரை சேர்க்க வேண்டும். இருமல் அதிகரிக்க காரணம் இனிப்புகள் தான். பனஞ்சர்க்கரை நலம் செய்யும். பனவெல்லமும் நல்லது தான் செய்யும். சுக்குக்கு பதிலாக இஞ்சி விழுதாக அரைத்து சேர்க்கலாம்.  மிளகு அதிகமாக்கினால் காரம் அதிகமாகி விக்கலை கொடுக்கும்.  இதனால் அருகில் சுடு தண்ணீர் வைத்துவிடுவது மிக நல்லது.

அவர்கள் உறங்கும் அறையில் குண்டு பல்ப் அல்லது அனைத்து ஜன்னல்கள் மூடியவாறு இருத்தல் நலம்.  கத கதப்பு அவர்களுக்கு முக்கியம்.  திப்பிலி ரசாயணம் வாங்கி அதை காலை, இரவு வேளைகளில் தினமும் சுண்டைக்காய் அளவு உருட்டி சாப்பிட்டால் உடல் சூடேறி, சுவாச அடைப்புகள் அனைத்தும் நீங்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.