மாணிவிகளிடம் அத்துமீறல் தலைமை ஆசிரியர் கைது

369d58a7-bf32-4268-af97-db7f3bf6d099_S_secvpf

நாகர் கோவிலை அடுத்த பூதப்பாண்டி அருகே உள்ள சீதப்பால் அரசினர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக சுப்பையன் வயது-52 பணியாற்றி வந்தார். சுப்பையன் பள்ளவிளை என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் அப்பள்ளி மாணவிகளிடம் செல்போன்களில் ஆபாச படங்களை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ராணி, சப்–இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் சுப்பையன் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் சுப்பையன், நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார், தொடக்கக் கல்வி அதிகாரி பாலசுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சுப்பையன் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து தலைமை ஆசிரியர் சுப்பையன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் மீதான புகார் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.