அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து பரிதாபமாக 32 பேர் பலியாகினர்.

201602051922170872_gujarat-accident-state-transport-bus-falls-into-river-in_SECVPF

குஜராத் நவ்சாரியில் இருந்து உகாய் பகுதிக்கு அந்தப் பேருந்து பயணிகளுடன் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. சுபா கிராமம் அருகே பூர்ணா (அம்பிகா) ஆற்றின் மீதுள்ள பாலத்தில் பேருந்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக 20 அடி உயரத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 37 பேர் பலியாகினர். 24 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விபத்துக்கு சரியான காரணம் தெரியவில்லை நமது செய்தியாளர் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கின்றார். பாலத்தின் மீது பேருந்து வந்தபோது, ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விட்டது என்று உயிர் தப்பிய பயணிகளில் சில பேர்கள் கூறினார்களாம்.

37 பேரும் பலியானது குறித்து குஜராத் மாநிலமே அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது.  காயமடைந்தவர்களை அம்மாநில அதிகாரிகள் சென்று விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.