செருப்பு அணிந்து வந்த முதல்வர் கெஜ்ரி. ஷூ வாங்க டிடி அனுப்பிய என்ஜினியர்

delhi_cm_002

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் ரூ.364க்கான டிடியை அனுப்பியுள்ளார். இந்தியாவில் 67வது குடியரசு தினம் கடந்த ஜனவரி 26ம் திகதி கொண்டாடப்பட்டது, இதில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலண்டே கலந்து கொண்டார்.

இவருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விருந்தளித்து அசத்தினார், இதில் மத்திய அமைச்சர்கள், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். விருந்துக்கு வந்த கெஜ்ரிவால் சாக்ஸ் போட்டு செருப்பு அணிந்து வந்திருந்தார், இந்த புகைப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினியரான சுமித் அகர்வால் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்துடன் அவர் ரூ.364க்கான டிடியையும் அனுப்பி வைத்துள்ளார்.

அதில், விருந்து நிகழ்வில் நீங்கள் செருப்பு அணிந்து வந்ததை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன், இனியும் இந்தியாவை தர்மசங்கப்படுத்த வேண்டாம், இதில் டிடி அனுப்பியுள்ளேன், அதில் ஷூ வாங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

என்ன ஒரு பெருந்தன்மையான என்ஜினியர். ஷூ வாங்க கூட முடியாமலா முதல்வர் ஆகியிருப்பார்.?.  தான் ஒரு எளிமையானவன் என்று காட்டுவதற்காக அவர் அணிந்திருப்பார். அதை யாரும் கேவலப்படுத்தவில்லை. டிடி அனுப்பிய என்ஜினியர் தான் கேவலப்படுத்திவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.