பேருந்தில் ஆண் குழந்தையை தவிக்க விட்டுச்சென்ற தாய் 

Tamil_News_large_1449394

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பஸ்சில் 6 மாதத்திற்கு முன் தவிக்கவிடப்பட்ட ஆண் குழந்தை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தேனி தேவதானப்பட்டியைச் சேர்ந்த சங்கர் மகன் ராஜன்.

கடந்த வருடம் ஆகஸ்டில் பெரியகுளத்தில் இருந்து அரசு பஸ்சில் மதுரை சென்றார். நிலக்கோட்டையை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டியில், 5 மாத கைக்குழந்தையுடன் ஒரு பெண் ஏறினார். பஸ்சில் கூட்டமாக இருந்ததால் ராஜனிடம் தன் குழந்தையை வைத்திருக்குமாறு கொடுத்தார்.

மதுரை வரை குழந்தையை வைத்திருந்த ராஜன், பஸ்சில் இருந்து இறங்கும் போது அதன் தாயை தேடினார். அவரை காணவில்லை. எனவே ராஜன், தேனி கலெக்டர் வெங்கடாசலத்திடம் நடந்ததை மனுவாக எழுதிக் கொடுத்து குழந்தையை ஒப்படைத்தார்.

தற்போது குழந்தை மதுரை மாவட்டம் கருமாத்துார் அருகே உள்ள தென்னமங்கலம் அழகு கருணை இல்ல குழந்தை காப்பகத்தில் உள்ளது. இதனை அறிந்த சைல்ட் லைன் அமைப்பினர், குழந்தையின் தாய் பற்றிய விபரத்தை தெரிவிக்குமாறு நிலக்கோட்டை போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் விசாரனை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.