கலைஞரின் மூத்த மகன் அழகிரி ஆவேசப் பேச்சு…….

azhagri

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, தி.மு.க.,வில் இருந்து, சில மாதங்களுக்கு முன், கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி நீக்கப்பட்டார். ‘அவர், மீண்டும் கட்சியில் சேர்க்கப்படலாம்’ என, சமீப நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், சென்னையில், ‘நமக்கு நாமே’ பயணம் மேற்கொண்ட தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ‘கட்சியில் அழகிரி சேர்க்கப்பட உள்ளதாக வெளியாகும் செய்தி வதந்தி.

அவரை கட்சியில் இருந்து நீக்கி, பல ஆண்டுகளாகிறது’ என்றார். இந்நிலையில், தன் மகனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, நேற்று, சென்னை வந்த அழகிரி கூறியதாவது: இப்போதைக்கு, நான் அமைதியாக இருக்கிறேன். சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், என் நிலைப்பாடு என்ன என்பதை அறிவிப்பேன். அதற்கு இரு மாதங்கள் ஆகலாம். தி.மு.க.,வில் இருந்து, என் ஆதரவாளர்கள் யாரும் நீக்கப்படவில்லை.

என் ஆதரவாளர்களை நீக்க வேண்டுமென்றால், லட்சம் பேரை நீக்க வேண்டும்.தி.மு.க.,வைப் பொறுத்தவரையில், நான் கட்சிக்காக எப்படி எல்லாம் பாடுபட்டிருக்கிறேன் என்பது, தலைவர் கருணாநிதிக்கு நன்கு தெரியும். கட்சியைப் பொறுத்தவரை, அவர் தான் எல்லாமே; மற்றவர்கள் கூறுவதை எல்லாம், ஒருநாளும் நான் ஏற்க மாட்டேன். பொருட்படுத்தவும் மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.