” பேஸ் மேக்கர்” தகவல்கள்

pace maker

இதயம் சீராக துடிக்கும் அளவிற்கு வலிமை குறைவாக இருப்பவர்களுக்கும் மற்றும் இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்கும் பொதுவாக ”பேஸ் மேக்கர்ஸ்” வைப்பார்கள்.  இதன் உதவியோடுதான் இதயம் சீராக துடிக்க வைப்பார்கள்.  ”பேஸ் மேக்கர்ஸ்” வைத்து சீராக இயங்க ஆரம்பித்தாலும் கூட ”பேஸ் மேக்கார்” வைத்தவர்கள் மற்றவர்கள் செய்யும் சில சாதாரண வேலைகளை கூடச் செய்யக்கூடாது.  மற்றும் சில இடங்களுக்கு செல்லக் கூடது என்ற கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.  ”பேஸ் மேக்கர்ஸ்” பற்றி எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்தான் இந்த கட்டுரையில் காணவிருக்கிறோம்.

பேஸ் மேக்கர்ஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

  1. மறுபக்கத்தில் மொபைல் பயன்படுத்த வேண்டும்

உங்கள் உடலில் இடது பக்கம் ”பேஸ் மேக்கர்” வைத்திருந்தால் அதற்கு மறுபக்கமான வலது பக்கத்தில் தான் செல்போன் உபயோகப்படுத்த வேண்டும்.  செல்போன் அலைவரிசையினால் ”பேஸ்மேக்கர்” ன் செயல்பாடு பாதிக்கும்.

  1. அதிக மின்னழுத்தம் உள்ள இடத்திற்கு போக வேண்டாம்.

உங்கள் உடலில் வைக்கப்பட்டிருக்கும் ”பேஸ் மேக்கரை” பாதிக்கக்கூடிய அதிக மின் அழுத்தம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம்.  வீட்டில் உள்ள கிரைண்டர், மிக்ஸி இயந்திரம் போன்றவற்றை உபயோகித்தல் கூடாது.

  1. மெட்டல் டிடக்டர் (Metal Dedactor)

பேஸ்மேக்கர்”” வைத்திருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தகவல் இது.  மெட்டல் டிடக்டர் (Metal Dedactor) வழியே அவர்கள் நடந்து செல்ல கூடாது.  இது பேஸ்மேக்கரின் இயக்கத்தை செயலிழக்க செய்துவிடுகிறது.

  1. செய்யக் கூடாத பரிசோதனைகள்

Ultra Sound, x-ray, Echocardiogram, CT Scan போன்ற பரிசோதனைகளை பேஸ்மேக்கர் வைத்திருப்பவர்கள் தயக்கமின்றி பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் MRI மட்டும் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.  ஏனென்றால், MRI பேஸ்மேக்கரின் Circuit-ஐ பாதித்துவிடும் என்று கூறுகிறார்கள்.  எனவே, டாக்டர் ஆலோசனையுடன் MRI செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

  1. கதிர்வீச்சு சிகிச்சைகள் கூடாது.

கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy) புற்றுநோய் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.  ஆனால் நேரடியாக கதிர்வீச்சு சிகிச்சைகளில் பேஸ்மேக்கர் வைத்துள்ளவர்கள் ,ஈடுபடக் கூடாது. கதிர்வீச்சு பேஸ்மேக்கரை பாதிக்கச் செய்கிறது.

  1. வகைகள்.

பேஸ்மேக்கரில், செயல்பாடு மற்றும் திறன் குறித்து பல வகைகள் இருக்கின்றன.  முதல் வகை பேஸ்மேக்கர் வைத்தல், இதயத்துடிப்பை மட்டும் தான் இயக்க முடியும். இரண்டாவது வகை இயல்பாக நடக்கக் கூட முடியாது.  மூன்றாவது வகை மாடிப்படி ஏறி இறங்கும் வகையில் இயங்க உதவும்.  மேற்கூறியவைகள் எல்லாம் பணத்தைப் பொறுத்து தான் இருக்கிறது.

  1. எச்சரிக்கை

மின்னணு உபகரணங்கள் உபயோகப்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.  முடிந்தவரை மின்னணு உபகரணங்களை உபயோகப் படுத்தாமல் இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.