நகைச்சுவை கலைஞர் மதுரை முத்துவின் மனைவி கார் விபத்தில் பலி

Tamil_News_large_1449415

சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே, நேற்று கார் மரத்தில் மோதியதில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி லேகா (எ) வையம்மாள், 32, இறந்தார். மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் முத்து. தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துகிறார்; நடிகராகவும் உள்ளார். நிகழ்ச்சிக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

இவரது மனைவி லேகா. நேற்று காலை மதுரையில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு காரில் வந்தார்.
காலை 7.15 மணிக்கு, திருப்புத்துார் கோட்டையிருப்பு அருகே சென்றபோது காரின் டயர் வெடித்து மரத்தில் மோதியது. பலத்த காயமடைந்த லேகா இறந்தார். காரை ஓட்டி வந்த தேனி சின்னமனுாரைச் சேர்ந்த கண்ணன் காயத்துடன் தப்பினார்.

விபத்து குறித்து கண்ணன் கூறுகையில், ”முத்துவிற்கு சொந்தமான இந்த காரை விற்கவும், புதிய படம் எடுக்க சாமி கும்பிடவும் பிள்ளையார்பட்டிக்கு சென்றோம். வழியில் வெடிக்கும் சப்தம் கேட்டது. அதன் பின் என்ன நடந்தது என தெரியவில்லை,” என்றார். டவுன் போலீசார் லேகாவின் உடலை திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published.